Entertainment
சூர்யாவுக்கு வாட்ச் பரிசளித்த கமல்
கடந்த வாரம் வெளியாகி மிக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் விக்ரம். கமல்ஹாசன், விஜய் சேதுபதி,பகத் பாஸில் மற்றும் பலரானோர் நடித்திருக்கும் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.
இப்படம் கடந்த வாரம் வெளியானதற்குள் பல கோடி லாபத்தை பார்த்துவிட்டதாம். முக்கியமாக ராஜ்கமல் பிலிம்ஸின் படங்கள் கமர்ஷியல் ரீதியிலாக வெற்றியடைந்து பல நாட்கள் ஆகி விட்டது.
தற்போது மிகப்பெரிய வெற்றியை இப்படம் பெற்றுள்ளதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர். கமலும் உற்சாகமடைந்து எல்லோருக்கும் பரிசுகளை அள்ளித்தருகிறார்.
விக்ரமில் பணிபுரிந்த உதவி இயக்குனர்கள் அனைவருக்கும் ஒரு அபாச்சி பைக், படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு ஒரு கார் என கமல் பரிசளித்துள்ளார்.
இந்நிலையில் படத்தின் க்ளைமாக்ஸில் சிறு காட்சியில் நடித்த நடிகர் சூர்யாவுக்கு ஒரு ரோலக்ஸ் வாட்சினை கமல் பரிசளித்துள்ளார்.
A moment like this makes life beautiful! Thank you Anna for your #Rolex! @ikamalhaasan pic.twitter.com/uAfAM8bVkM
— Suriya Sivakumar (@Suriya_offl) June 8, 2022
