Latest News
நன்கொடை கேட்கும் கமல்ஹாசன்
கமல்ஹாசனின் நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் ஒரு பக்கம் அரசியல் பணிகள் வேகமாக சென்று கொண்டிருக்கின்றன. மக்கள் நீதி மய்யம் கட்சியை இராமேஸ்வரம், மதுரையில் ஆரம்பித்து கட்சி பணிகளை செய்தாலும் பெரிய அளவில் இவரது கட்சி இன்னும் வளராமல் அப்படியே உள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசனும் கோவை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.
இந்த நிலையில் கட்சியை விட்டு பலர் விலகினர். இருப்பினும் மனம் தளராமல் கட்சியை நடத்தி வரும் கமல்ஹாசன், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக மக்களிடம் நிதி கேட்டு வருகிறார்.
இது தொடர்பாக அவரின் அறிக்கை
நம்மீது திணிக்கப்பட்டிருக்கும் தரமற்ற அரசியலை மாற்றி, மக்கள்நலனை முன்னிறுத்தும் நேர்மையான அரசியலைச் செய்ய தீவிரமாகக் களத்தில் நிற்கிறோம். பகாசுர ஊழல்பேர்வழிகளை எதிர்த்துப் போராட பணஉதவி செய்யுங்களென உரிமையுடன் உங்களிடம் கேட்கிறேன் என கமல் டுவிட் செய்துள்ளார்.
நம்மீது திணிக்கப்பட்டிருக்கும் தரமற்ற அரசியலை மாற்றி, மக்கள்நலனை முன்னிறுத்தும் நேர்மையான அரசியலைச் செய்ய தீவிரமாகக் களத்தில் நிற்கிறோம். பகாசுர ஊழல்பேர்வழிகளை எதிர்த்துப் போராட பணஉதவி செய்யுங்களென உரிமையுடன் உங்களிடம் கேட்கிறேன். https://t.co/NsgkJ2uRuT#Donate2HonestPolitics pic.twitter.com/TW5VUmwPIx
— Kamal Haasan (@ikamalhaasan) February 2, 2022
