Tamil Flash News
கமல்ஹாசன் கட்சியில் இணைந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி
சமீபத்தில் தனது ஐபிஎஸ் பதவியை உதறி விட்டு முழு மூச்சாக அரசியல் களத்தில் இறங்கி போராடிக்கொண்டிருப்பவர் அண்ணாமலை ஐபிஎஸ். இவரது வருகைக்கு பின் பாரதிய ஜனதாவினர் உற்சாகமடைந்துள்ளனர்.
இது போல கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துக்கு வலு சேர்க்க ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி அக்கட்சியில் இணைந்துள்ளார்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பல உயர் பொறுப்புகளை வகித்த அந்த அதிகாரியின் பெயர் சந்தோஷ்பாபு. இன்னும் எட்டு ஆண்டுகள் பணி உள்ள நிலையில் தனது பணியினை ராஜினாமா செய்து விட்டு மக்கள் நீதி மய்யத்தில் இணைந்துள்ளார்.
அவருக்கு கமல்ஹாசன் பொதுச்செயலாளர் பதவி கொடுத்து கெளரவித்துள்ளார். தங்களின் மய்யத்தில் இணைந்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் கமல்.