Corona (Covid-19)
படங்களை வாங்கி அமேசானிடம் விற்க கமல் திட்டம்! கிளம்புமா சர்ச்சை?
தமிழ் சினிமாவில் தயாராகி ரிலீஸாக முடியாமல் சிக்கித் தவிக்கும் படங்களை வாங்கி ஓடிடி பிளாட்பார்ம்களில் விற்க கமல்ஹாசன் முயற்சி செய்துவருவதாக சொல்லப்படுகிறது.
ஊரடங்கு உத்தரவு காரணமாக உலகம் முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டு இருக்கும் காரணத்தால் ரிலீசுக்கு தயாராக உள்ள திரைப்படங்கள் அனைத்தும் முடங்கியுள்ளன. இதனால் உலகம் முழுவதும் பல கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்படலாம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தமிழில் உருவான பொன்மகள் வந்தாள் எனும் திரைப்படம் நேரடியாக அமேசான் ப்ரைமுக்கு விற்கப்பட்டதால் சர்ச்சை உருவானது.
ஆனாலும் எதிர்ப்புகளை மீறி இன்று அந்த படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் மூலம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படங்களை வாங்கி அவற்றை ஓடிடி தளத்திற்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் ரிலீசுக்கு தயாராக உள்ள திரைப்படங்களை வைத்துள்ள தயாரிப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் சுமார் பத்து படங்களை வாங்கி அவற்றை அமேசான் உள்பட ஓடிடி நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கமலஹாசனின் இந்த புதிய ஓடிடி பிசினஸ் நிச்சயம் பலனளிக்கும் என்று கூறப்படுகிறது.
