ஒவ்வொரு தவறும் உயிரை பலி வாங்குகிறது! அரசைக் கடுமையாக விமர்சிக்கும் கமல்!

258

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவது குறித்து தனது எதிர்ப்பை டிவிட்டரில் தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.

ஊரடங்கை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் கடந்த 40 நாட்களாக மூடப்பட்ட நிலையில் பல விதங்களில் குடிகாரர்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மே 7 ஆம் தேதி முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் எல்லையில் உள்ள பொதுமக்கள் மாநில எல்லைகளை கடந்து செல்வதை தடுப்பதில் சிரமம் இருப்பதால் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.  ஆனால் நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் கடைகள் திறக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ள செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த செயல்பாடு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன் ” கோயம்பேடை காப்பாற்ற இயலாமல் தொற்று எண்ணிக்கையை அதிகப் படுத்திய அரசு, இப்பொழுது டாஸ்மாக்கை திறக்குமாம். அரசின் ஒவ்வொரு தவறும் உயிர்களை பலி வாங்குவது புரியவில்லையா தலைமைக்கு.” என விமர்சித்துள்ளார்.

பாருங்க:  பிக்பாஸ் சீசன் 4 தொகுப்பாளர் இவர்தான் - உறுதி செய்த விஜய் டிவி