கமலஹாசன் பிறந்த நாள் மிகப்பெரிய பேனர் வைத்து அசத்தும் கட்சியினர்

கமலஹாசன் பிறந்த நாள் மிகப்பெரிய பேனர் வைத்து அசத்தும் கட்சியினர்

நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாள் வருகிற நவம்பர் 7ல் நடைபெறுகிறது. வழக்கமாக கமல்ஹாசனின் ரசிகர்கள் மிக பிரமாண்டமாக கொண்டாடுவார்கள். இப்போது கமல் கட்சி தொடங்கி கட்சித்தலைவர் ஆகிவிட்டதால் முன்பு இருந்ததை விட ஒரு படி மேலே போய் கலக்கலாக கொண்டாடுகிறார்கள்.

வரும் நவம்பர் 7ல் பிறந்த நாள் காணும் கமல்ஹாசனை வாழ்த்தி சென்னையில் மிகப்பெரும் பேனர் வைக்கப்பட்டுள்ளது. கமலின் கட்சியான மக்கள் நீதி மய்யத்தை நிர்வாகிகள் ஒவ்வொருவரும் சேர்ந்து மக்கள் நீதி மய்யத்தின் ஐடி விங் சார்பாக மிகப்பெரிய பேனரை சுவரில் ஒட்டியுள்ளனர்.

மிக நீளமான இந்த பேனர் பார்ப்பவர்களை கவர்ந்து வருகிறது.