நடிகர் கமல்ஹாசன் அவர்களின் 66வது பிறந்த நாள் இன்றாகும் கடந்த 1954ம் வருடம் ராமநாதபுரத்தில் உள்ள சேதுபதி மன்னரின் அரண்மனையில் பிறந்தவர் கமல்ஹாசன். பிறந்தது முதலே நடிப்பின் மீது ஆர்வம் உள்ள கமல்ஹாசன் பரமக்குடியில் தனது வீட்டில் அருகேயுள்ள ரவி தியேட்டரில் அடிக்கடி மதுரை வீரன் படம் பார்த்துள்ளார் இப்படி சினிமா மீது ஆர்வமுள்ள கமல் களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தொடர்ந்து பார்த்தால் பசி தீரும், ஆனந்த ஜோதி, குறத்தி மகன் என படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.
இயக்குனர் பாலச்சந்தாரால் மூன்று முடிச்சு, நினைத்தாலே இனிக்கும்,அவள் ஒரு தொடர்கதை உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாக்கப்பட்டு உலக நாயகன் என பெயர் பெற்றார்.
கமல் நடிப்புத்திறனுக்கு அபூர்வசகோதரர்கள், இந்தியன், ராஜபார்வை, சத்யா, பேசும்படம், குணா, பாபநாசம் என பல படங்களை உதாரணமாக சொல்லலாம்.
இன்று கமல் பிறந்த நாளாதலால் டிவிட்டர் முழுக்க கமலே டிரெண்டிங்கில் இருந்தார்.கமலின் ரசிகர்கள் கமலின் 66வது பிறந்த நாளை கொண்டாடி தீர்த்து விட்டனர்.
கமலிடமே கூட இல்லாத கமலின் பழைய போஸ்டர்களை, பேப்பரில் வந்த பழைய பேட்டிகளின் கட்டிங்குகளை தினமும் டிவிட்டரில் வெளியிட்டு வருபவர் கமலின் தீவிர ரசிகர் ராஜபார்வை ராமு அவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை பாருங்கள்.
இன்று #கமல்ஹாசன் அவா்௧ளின் 66 வது பிறந்த நாள் ௧ொண்டாட்டமா௧ பெங்௧ளுா் மாநகாில் 70 ஆதரற்றவா்௧ளுக்கு பிரியாணி பழங்௧ள் கே௧் இனிப்பு வழங்கி சிறப்பா௧ கொண்டாடப்பட்டது பழைய நண்பா்௧ளை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி #HBDKamalHaasan #HappyBirthdayKamalHaasan pic.twitter.com/FW99yUWmy1
— Rajaparvai Ramu Bengaluru (@RajaparvaiB) November 7, 2020