சொந்த கிராமத்துக்கே வராத கமல்- கடும் வேதனையில் கிராம மக்கள்

50

கமல்ஹாசனின் சொந்த ஊர் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஆகும். இது எல்லோருக்கும் தெரிந்த விசயம்தான். பரமக்குடியில் இவரது வீடு உள்ளது பரமக்குடியில்தான் சிறுவயதில் கமல் வளர்ந்தார்.

ஆனால் கமல்ஹாசனின் தாய், தந்தை வழி பூர்விக கிராமம் இராமநாதபுரம் தூத்துக்குடி ஈசிஆர் சாலையில் சிக்கல் அருகேயுள்ள கொத்தன்குளம் அருகில் உள்ள தத்தங்குடி என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள்.

கமலின் முன்னோர்கள் பலரும் 1950, 60களில் ஒவ்வொருவராக ஊரை காலி செய்து விட்டு பெரு நகரங்களில் சென்று குடியேறி விட்டனர். இந்த சின்னஞ்சிறிய கிராமத்தில் ஒரு சிறிய அக்ரஹாரம் இன்றும் உள்ளது. இவர்களது உறவினர்களின் வீடுகள் எல்லாம் சிதிலமடைந்து இப்பகுதியில் இவர்கள் வாழ்ந்ததற்கான அடையாளம் மட்டுமே உள்ளது.

இராமநாதபுரம் சேதுபதி அரண்மனையில் பிறந்த கமல்ஹாசன் பூர்விக கிராமமான இந்த ஊரில் சில காலம் இருந்ததாகவும் பின்பு அருகிலுள்ள பரமக்குடி நகரத்துக்கு சென்றதாகவும் வெள்ளந்தியான கிராம மக்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

இந்த ஊரில் கமல்ஹாசன் முன்னோர்கள் வழி தெய்வங்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஊருக்கும் கமல்ஹாசனின் உறவினர்கள் அவ்வப்போது வந்து சென்றாலும் கமலோ அவரை சார்ந்தவர்களோ ஒரு முறை கூட இவ்வூருக்கு வரவில்லை வந்து பார்வையிடவில்லை அவர் எலக்சன்ல நின்றால் எங்க ஓட்டு அவருக்குத்தான் எங்க கிராமத்துக்கு அவர் எல்லாவற்றையும் சிறப்பாக செய்து கொடுக்க வேண்டும் என சொல்லி வருகின்றனர் அவ்வூர் மக்கள்.

https://youtu.be/Pk-8QeU3diw

பாருங்க:  இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் துவக்கம்...