புயல் நடவடிக்கை சரி இல்லை அரசு மீது கமல் குற்றச்சாட்டு

114

நேற்று முன் தினம் நிவர் புயல் எல்லோரையும் மிரட்டி எடுத்தது. இறுதியில் புயல் வலுவிழந்து கரையை கடந்தது. இருப்பினும் மழையால் வட மாவட்டங்கள் பல பாதிக்கப்பட்டன.

இந்த மழையால் வீடுகள் பல சேதமடைந்தன, வீட்டுக்குள் தண்ணீர் புகுந்தன இது போன்ற சேதமடைந்த பாதிப்படைந்த பகுதிகளில் சரியான நிவாரணப்பணிகள் செய்யவில்லை என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

ஆற்றின் கரையோரத்தில் வசிக்கின்ற மக்களுக்கு வேறு ஒரு மாற்று இடத்தில் வீடுகள் கட்டித்தர வேண்டும். போன 2015 புயல் வெள்ளத்தில் அரசு பாடம் கற்றுக் கொண்டபோதும், எந்தப் பலனும் இல்லை. ஏற்பாடுகள் சிறப்பாக இருந்ததா என்று கேட்டால்…  இங்கே இருப்பவர்களிடம் கேளுங்கள்.

அரை மணி நேரத்திற்கு முன் வெள்ளம் வரும் காலி பண்ணுங்க எனச் சொல்ல வேண்டிய அவசியம் என்ன? அவர்களுக்கு எல்லா நிலவரங்கள் தெரியும். இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாம் என்பது ஊரறிந்த உண்மை என கூறியுள்ளார்.

பாருங்க:  வலிமை படம் -இயக்குனர் கொடுத்த புதிய அப்டேட்
Previous articleவலிமை போஸ்டரால் மகிழ்ச்சிக்கடலில் ரசிகர்கள்
Next articleசென்னை மாநகராட்சிக்கு மாதவன் பாராட்டு