கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் கட்சி செயல்பட்டு வருகிறது. இந்த கட்சியின் நிர்வாகியாக இருப்பவர் டாக்டர் மகேந்திரன். இவர் மக்கள் நீதி மய்யத்தின் மாநில துணைத்தலைவராக உள்ளார்.
மேலும் இவர் விவசாயி, டாக்டர் என பல்வேறு பரிமாணங்களை உடையவர். பொதுவாக கமல்ஹாசன் கூட்டங்களுக்கு மட்டும் சென்று விட்டு வருவார்.
தன்னை சந்திக்க வருபவர்களிடம் நேரடியாக புகைப்படம் எடுத்து கொள்வார். இப்போது தன் கட்சி நிர்வாகியான டாக்டர் மகேந்திரன் வீட்டுக்கு நேரடி விசிட் அடித்துள்ளார்.
மகேந்திரன் அவர்களின் பேரக்குழந்தையை வாழ்த்தியுள்ளார். இதை பெருமையாக மகேந்திரன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
நம்மவர்
அவர்கள் எங்கள் இல்லத்திற்கே வருகை தந்து என் பேரனை வாழ்த்திய இந்தக் கணம், எங்கள் குடும்பத்தில் பெருமிதம் பொங்கும் தருணம்.என அவர் குறிப்பிட்டுள்ளார்.
https://twitter.com/drmahendran_r/status/1336322263142973446?s=20