cinema news
அந்தக்கால நடிகர் கல்தூண் திலக் மரணம்
70களின் இறுதி வரை வந்த பல படங்களில் தனது வில்லத்தனத்தால் அச்சம்மூட்டியவர் கல்தூண் திலக். இவர் பல படங்களில் வில்லனாகவும் எதிர்மறையான பாத்திரங்களிலும் மட்டுமே நடித்தார்.
நடிகரும் இயக்குனருமான மேஜர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் வந்த கல்தூண் படத்தில் இவர் வில்லனாக நடித்திருந்தார்.
எல்லோரையும் பாதித்து வரும் கொரோனா தொற்று இவரையும் விட்டு வைக்கவில்லை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த திலக் தனது 78வது வயதில் நேற்று மரணமடைந்தார்.