நேற்று கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ பிரபுவின் திருமணம் நடந்தது. அவர் அங்குள்ள கோவில் குருக்கள் ஒருவரின் மகளான செளந்தர்யாவை காதலித்து திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.
தற்போது 39வயதாகும் பிரபு 19 வயதான தன் மகளை கூட்டி சென்று திருமணம் முடித்தது சரியாகுமா என கோவில் அர்ச்சகர் பலரிடம் கேள்வி கேட்டிருந்தார். சாதி ஒரு பிரச்சினை இல்லை வயதுதான் இந்த திருமணத்தை நான் எதிர்ப்பதற்கு காரணம் என்ற வகையில் குருக்களின் பேட்டி அமைந்து இருந்தது.
மேலும் நான் எம்.எல்.ஏ சபாநாயகர் கையெழுத்து இட்டால்தான் என்னை கைது செய்ய முடியும் என பிரபு பேசியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் நேற்று சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இந்நிலையில் பெண்ணின் தந்தை இது குறித்து ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது