காளிகாம்பாள் கோவிலில் ஸ்வாமி தரிசனம் செய்த ஹெச்.ராஜா

காளிகாம்பாள் கோவிலில் ஸ்வாமி தரிசனம் செய்த ஹெச்.ராஜா

சென்னை பாரிமுனை தம்பு செட்டி தெரு அருகே உள்ளது புகழ்பெற்ற காளிகாம்பாள் கோவில். இங்கு பலரும் வழிபடுவது வழக்கம். கேட்பவருக்கு நல் வரங்களையும் மனதில் வலிமையையும் கொடுப்பவள் காளிகாம்பாள்.

மஹாகவி பாரதியார் சுதேசமித்திரனில் வேலை செய்த சில நாட்கள் தினமும் இங்கு வந்து காளிகாம்பாளை வழிபடுவது வழக்கம். ஞானத்தாயான காளிகாம்பாளை வணங்கி, காளிகாம்பாள் மீது பாசுரம் பாடினார்.

அரசியல் தலைவர்கள், நடிகர்கள் அடிக்கடி வந்து செல்லும் கோவில் இது. நடிகர் ரஜினிகாந்த் சில வருடங்கள் முன்பு இங்கு அடிக்கடி வந்து சென்றார்.

இந்நிலையில் பாரதிய ஜனதாவின் முன்னாள் தேசிய பொதுச்செயலாளரும் முன்னணி தலைவர்களில் ஒருவருமான ஹெச்.ராஜா காளிகாம்பாளை வணங்கி சென்றுள்ளார்.

https://twitter.com/HRajaBJP/status/1337751936603365377?s=20

https://twitter.com/HRajaBJP/status/1337751936603365377?s=20