களத்தில் சந்திப்போம் இன்று மாலை டீசர்

களத்தில் சந்திப்போம் இன்று மாலை டீசர்

புதுவசந்தம், நாட்டாமை, சேரன் பாண்டியன், லவ் டுடே, பூமகள் ஊர்வலம், ஷாஜகான் உள்ளிட்ட பல்வேறு படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் ஆர்.பி செளத்ரி 90படங்களுக்கு மேல் தயாரித்து பல புதுமுக இயக்குனர்களை தமிழ்சினிமாவில் அறிமுகம் செய்தவர் இவர்.

இவர் மகன் ஜீவா மற்றும் கலைஞரின் பேரனும் முக தமிழரசு மகனுமாகிய அருள்நிதியை வைத்து களத்தில் சந்திப்போம் என்ற படத்தை தயாரிக்கிறார்.

அருள்நிதி, ஜீவா இருவரும் முன்னணி நடிகர்கள் என்றாலும் பல வருடங்களாக இவர்கள் இருவரும் நடித்த எந்த படமும் முன்னணியில் இல்லை அதற்காக வித்தியாசமான கதைக்களத்துடன் இயக்குனர் ராஜசேகர் இப்படத்தை உருவாக்கி வருகிறார்.

இப்படத்துக்கு இசையமைத்திருப்பவர் யுவன் ஷங்கர் ராஜா.

இப்படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகிறது.