இன்று மஹா கால பைரவாஷ்டமி

இன்று மஹா கால பைரவாஷ்டமி

பைரவருக்குரிய விசேஷ தினங்களில் கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை அஷ்டமி முக்கியமானதாகும். இந்த தேய்பிறை அஷ்டமியில்தான் பைரவர் தோன்றியதாக ஐதீகம்.அந்த அடிப்படையில் மஹா கால பைரவாஷ்டமி கொண்டாடப்படுகிறது.

இன்று கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி என்பதால் அது பைரவருக்குரிய ஜென்மாஷ்டமியாக கொண்டாடப்படுகிறது.

சனீஸ்வர பகவானின் கொடூர தாக்கத்தில் இருந்து மீள முடியாமல் தவிப்போர் காலபைரவரை வணங்கி வலிமை பெறலாம். ஏனென்றால் சனீஸ்வரனின் குரு பைரவர் ஆவார்.

அதனால் குருவை வணங்கினால் தனது சிஷ்யன் சனீஸ்வரனின் தொல்லையில் இருந்து உங்களுக்கு பாதுகாப்பு தருவது உறுதி.

இன்று கோவிலுக்கு சென்று சிவன் கோவில்களிலோ ஏனைய கோவில்களிலோ நடக்கும் பைரவருக்குரிய சிறப்பு பூஜைகளில் கலந்து கொள்ளுங்கள். உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து வழிபடுங்கள் வாழ்வில் சகல முன்னேற்றமும் கிடைக்கும் என்பது உறுதி.

பைரவர் நம் கர்மவினைகளை அழிப்பவர் நீங்கள் தொடர்ந்து வழிபட உங்கள் கர்மவினைகளை நீர்த்து போக செய்து விடுவார் பைரவர்.