Latest News
நவக்கிரகங்களை கட்டுப்படுத்தும் காலபைரவர்
1.ஜோதிடத்திற்கு அடிப்படையாக இருப்பவை ஒன்பது கிரகங்கள், 12 ராசிகள் மற்றும் 27 நட்சத்திரங்கள் ஆகும்.
2.நவக்கிரகங்கள் அனைத்தும் காலதேவன் என்று சொல்லக்கூடிய காலபைரவரின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன.
3.நம் ஒவ்வொருவருடைய ஆயுள் மற்றும் தொழிலை நிர்ணயம் செய்வது சனி பகவான் சனிபகவானின் குருவாக இருப்பவர் கால பைரவ பெருமான்!!!
4.காலபைரவர் பெருமானை தினமும் வழிபடுவதால் சனி பகவான் பெரு மகிழ்ச்சி அடைகிறார்.
5.ஜென்மச் சனி மற்றும் அஷ்டம சனி காலத்தில் காலபைரவரை வழிபடுவதால் சனிபகவான் மகிழ்ச்சி அடைகிறார் !!!அதனால் ஜென்ம சனி மற்றும் அஷ்டமச் சனியால் மனிதர்களுக்கு உண்டாகும் துயரங்களை அவரே குறைத்துக் கொள்கிறார்.
6.
20 .12 .2023 வரை மகர ராசிக்கு ஜென்ம சனி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது; மிதுன ராசிக்கு அஷ்டம சனி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ;
இந்த இரண்டு ராசிக்காரர்களும் இந்த தேதி வரை அசைவம் சாப்பிடும் பழக்கத்தை நிறுத்த வேண்டும்;
மது அருந்துவதை நிறுத்த வேண்டும்; அதன் பிறகுதான் கால பைரவரை வழிபட ஆரம்பிக்க வேண்டும்.
7.
ஜென்ம சனி மற்றும் அஷ்டமச் சனி காலத்தில் அசைவம் சாப்பிடுபவர்களுக்கு சனிபகவானால் துயரங்கள் நான்கு மடங்காக அதிகரிக்கிறது என்பதை சமீபத்திய மேல்நாட்டு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
8.
ஜோதிடம் பார்ப்பவர்கள் ,
அருள்வாக்கு சொல்பவர்கள் ,
குறி சொல்பவர்கள்,
சித்தர்கள் அருளாசியால் முக்காலமும் உரைப்பவர்கள்
தினமும் காலையில் தூங்கி எழுந்ததும் பின் வரும் பைரவ சித்தர் பெயரை ஒருமுறையாவது ஜெபிக்க வேண்டும்
“ஓம் ஸ்ரீ வார தாரக சித்தர் குரு நம ஸ்வாஹா”
9.
இவர்தான் பைரவ உலகத்திலிருந்து இந்தக் கிழமை அன்று இந்த நட்சத்திரம் இத்தனை மணி நேரம் உதயமாக வேண்டும் என்பதையும் இந்த நட்சத்திரம் இருக்கும்போது இந்த திதியும் கரணமும் இவ்வளவு நேரம் இருக்க வேண்டும் என்பதை மகாகால பைரவர் பெருமானின் அருளால் தீர்மானம் செய்கிறார்.
10. “ஒரு யுகத்தின் ஆரம்பத்தில் ராகு கிரகத்தை தவிர மீதி எட்டு கிரகங்களும் முதல் ராசியான மேஷ ராசியில் ஒன்று சேரும் .முதல் நட்சத்திரமான அசுவினி நட்சத்திரத்தில் முதல் பகுதியான அதிபதி 1ஆம் பாதத்தில் 8 கிரகங்கள் ஒன்றுசேரும் நாள்தான் ஒரு யுகத்தின் ஆரம்ப நாள்” என்று பழமையான ஜோதிட நூலான ஆரிய பட்டியம் தெரிவிக்கிறது.
11. ஒவ்வொரு சனி பெயர்ச்சி நாள் அன்றும் திருநள்ளாறு அருள்மிகு தர்ப்பணேஸ்வரர் திருக்கோயில் மீது சனி கிரகத்திலிருந்து கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் விழுகின்றன என்பதை அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா 5 ஆண்டுகள் ஆராய்ந்து கண்டுபிடித்துள்ளது.
சனிப்பெயர்ச்சி நாளுக்கு முந்தைய 24 நாளும் பிந்தைய 24 நாளும் அந்த சனி கிரகத்திலிருந்து வரக்கூடிய கரு நீல கதிர்களின் அடர்த்தி படிப்படியாக அதிகரித்து குறைகிறது.
12. அமெரிக்க கண்டம் மற்றும் ஐரோப்பிய கண்டத்தில் ஜோதிடம் பற்றி ஆராய்ச்சி செய்வதற்கு ஏராளமான அமைப்புகள் உருவாகி வருகின்றன. அதுதவிர வேத ஜோதிடம் என்ற பெயரில் ஜோதிடம் சொல்லித் தரும் அமைப்புகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன.
சிவராஜ யோக ஜோதிடர்
வீரமுனி சுவாமிகள்
9629439499
ராஜபாளையம்.