Latest News
மேயர் சந்திக்காததால் கல் தூணுக்கு சால்வை அணிவித்து கெளரவம் செய்த பாஜகவினர்- மதுரை வினோதம்
மதுரையில் முக்கிய பிரபலங்களில் ஒருவர் டாக்டர் சரவணன். இவர் கடந்த ஆண்டு திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இருந்து வருகிறார். இவர் மதுரை மாவட்ட பாஜக தலைவராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் கோரிக்கை மனு கொடுப்பதற்காக பாஜக சார்பில் மேயரை சந்திக்க இவர்கள் சென்றுள்ளனர். அப்போது மேயர் இவர்களை சந்திக்காததால் அங்கிருந்த கல்தூணுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளனர்.
இது குறித்து டாக்டர் சரவணன் கூறி இருப்பதாவது,
மதுரை மாநகராட்சி அலுவலக கல்தூணிடம் இன்று கோரிக்கை மனு வழங்கினோம்! மதுரை மாநகராட்சி மேயர் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கவும், சில முக்கியமான கோரிக்கைகளுக்கு மனு அளிக்கவும் பா.ஜ.க நிர்வாகிகள் சென்றிருந்தோம். மேயர் அவர்களின் உதவியாளர் காத்திருக்க கூறினார். நீண்ட நேரம் காத்திருந்தும
மேயர் அவர்களை சந்திக்க அனுமதிக்கவில்லை. ஆனால், அதற்கடுத்து வந்த தி.மு.க-வினரை மட்டும் அனுமதித்தனர். பொதுமக்களின் கோரிக்கைகளுக்காக மனு அளிக்க வந்த எங்களை மேயர் அவர்கள் சந்திக்காததால் அங்கிருந்த கல்தூணிற்கு சால்வை அணிவித்து, கோரிக்கை மனுக்களை அருகில் வைத்து விட்டு வந்துவிட்டோம் என சரவணன் கூறியுள்ளார்.