Entertainment
35 ஆண்டுகளை கடந்த காக்கி சட்டை- மறக்க முடியாத சத்யராஜின் தகடு தகடு
சத்யா மூவிஸ் தயாரிப்பில் கடந்த 1985ம் ஆண்டு வெளியான படம் காக்கி சட்டை. கமல், அம்பிகா, சத்யராஜ், மாதவி போன்றோர் நடித்திருந்த இப்படத்தை ராஜசேகர் இயக்கி இருந்தார்.
இப்படத்தில் இடம்பெற்ற பூப்போட்ட தாவணி, வானிலே தேனிலா, பட்டுக்கன்னம் போன்ற பாடல்கள் இன்றளவும் பயங்கர ஹிட் பாடல்கள். சிறப்பான பாடல்களை இளையராஜா கொடுத்திருந்தார்.
படத்தின் டைட்டில் பிஜிஎம்மிலேயே இளையராஜா பட்டைய கிளப்பி இருந்தார்.
காவல்துறையில் சேரத்துடிக்கும் ஒரு இளைஞன் , அதற்கான முயற்சி எடுத்தும் அதற்கான வேலை கிடைக்காமல் , கடத்தல் கும்பலிடம் சேர்வதாக அமையும் படம்.
இறுதியில் காவல்துறையின் உளவாளியாக அந்த கடத்தல் கும்பலிடம் சேர்ந்து கமல் உளவு பார்ப்பதாக கதை அமைந்திருக்கும்.
இந்த படத்தில் சத்யராஜ் பேசும் தகடு தகடு வசனம் புகழ்பெற்ற வசனம் ஆகும். எப்போதும் எவராலும் மறக்க முடியாத ஸ்டைலிஷ் கதாபாத்திரத்தில் சத்யராஜ் இப்படத்தில் நடித்திருந்தார்.
இப்படத்தை இயக்கிய இயக்குனர் ராஜசேகர் மறைந்துவிட்டார் இருப்பினும் இன்னும் இப்படம் ரசிகர்கள் மனதில் நிற்கிறது.
