கணவருடன் தடுப்பூசி செலுத்திக்கொண்ட காஜல்

கணவருடன் தடுப்பூசி செலுத்திக்கொண்ட காஜல்

தமிழில் முன்னணி நடிகர்கள் பலருடன் நாயகியாக நடித்து விட்டு தற்போது சினிமாவை விட்டு ஒதுங்கி திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் நடிகை காஜல் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் தாக்கத்தால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்காக கோவிஷீல்டு, கோவேக்சின் என்ற இரண்டு தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் கணவருடன் சென்று தடுப்பூசி செலுத்திக்கொண்டதுடன் எப்போது நேரம் இருக்கிறதோ அப்போது உடனடியாக சென்று தடுப்பூசி செலுத்திகொள்ளுங்கள் என காஜல் கூறியுள்ளார்.