தீபாவளி ரிலீஸில் இணைந்த ‘கைதி’ – வெளியான போஸ்டர்

346

Kaithi movie release in deepavali – லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள கைதி திரைப்படம் தீபாவளி விருந்தாக வெளியாகவுள்ளது.

மாநகரம் திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்தவர் லோகேஷ் கனகராஜ். இவரின் 2வது படம்தான் கைதி. சிறையில் இருந்த கைதி ஒருவரை ரவுடிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொலை செய்ய துடிக்கும் முயற்சியே கைதி படத்தின் ஒரு வரிக்கதை ஆகும். இப்படத்தின் டிரெய்லர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், இப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்ததோடு, அதற்கான போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜே விஜயின் அடுத்த திரைப்படத்தை இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே விஜயின் பிகில், விஜய் சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ ஆகிய படங்கள் தீபாவளி வெளியீடு என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த வரிசையில் ‘கைதி’யும் இணைந்துள்ளது.

பாருங்க:  அவள எதாவது பண்ணுடா - ஆபாச வசனங்கள் தெறிக்கும் ‘பப்பி’ டிரெய்லர் வீடியோ
Previous articleபிக்பாஸ் நிகழ்ச்சி போதும்… கமல் எடுத்த முடிவு… அடுத்த தொகுப்பாளர் இவரா?
Next articleகஞ்சா பழக்கத்திலிருந்து எப்படி மீண்டேன் தெரியுமா? – பாக்யராஜ் ஓப்பன் டாக்