கைதியின் டைரி படப்பிடிப்பின்போது எம்.ஜி.ஆர் கொடுத்த சர்ப்ரைஸ்

83

நடிகரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் தன் யூ டியூப் சேனலில் அரிய பல தகவல்களை கூறி வருகிறார். அரிய சினிமா கலைஞர்களை பேட்டி எடுத்து ஒளிபரப்பி வருகிறார்.

அந்த வகையில் கைதியின் டைரி படப்பின்போது நடந்த ஒரு சம்பவத்தை அவர் கூறியுள்ளார்.

ஊட்டியில் “ஒரு கைதியின் டைரி” படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றபோது அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்.அங்கே தமிழகம் என்ற பெயரில் அமைந்திருந்த அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார்.முதல் அமைச்சர் தங்கியிருந்ததால் அங்கே படப்பிடிப்பு நடத்த எங்களுக்கு அரசு அனுமதி தரவில்லை.
எம்ஜிஆர் அங்கே தங்கியிருக்கின்ற சேதி தெரிந்தவுடன் மரியாதை நிமித்தமாக பாரதிராஜாவும் நானும் தமிழகம் சென்று அவரை சந்தித்தோம். அப்போது “இங்கே எல்லாம் கூட உங்கள் படப்பிடிப்பை நடத்தலாமே” என்று எம்ஜிஆர் சொல்ல “நீங்கள் தங்கியிருப்பதால் இங்கே படப்பிடிப்பை நடத்த அரசு அதிகாரிகள் எங்களுக்கு அனுமதி தரவில்லை “என்றார்.
அடுத்த நொடி அரசு அதிகாரிகளிடம் எம்ஜிஆர் பேச பாரதிராஜா அங்கே படமெடுக்க உடனடியாக அனுமதி வழங்கப்பட்டது. கமல்ஹாசனும் ரேவதியும் பங்கு பெற்ற பாடல் காட்சி அங்கே படமாக்கப்பட்டபோது ஏறக்குறைய இரண்டு மணி நேரம் புரட்சித் தலைவர் எங்களுடன் இருந்தார்.அப்போது எடுக்கப்பட்ட படம்தான் இது.
பாருங்க:  2019 தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் - இன்று வெளியிடு