கைதி இரண்டாம் பாகம் எடுக்க தடை

19

கடந்த 2019ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான திரைப்படம் கைதி. கார்த்தி நடித்திருந்த இப்படம் வசூலில் சக்கை போடு போட்ட திரைப்படம். நல்லதொரு அதிரடியை இப்படத்தில் வெளிப்படுத்தி இருந்தார் கார்த்தி. லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார் லோகேஷ் கனகராஜ்க்கு பெயர் சொன்னது இந்த திரைப்படம்.

இந்த திரைப்படத்தின் இறுதியில் கைதி இரண்டாம் பாகம் வரும் என குறிப்பிடப்பட்டது.

இந்நிலையில் கேரள மாநில கொல்லத்தை சேர்ந்த ராஜன் என்பவர் கடந்த சில வருடங்கள் முன் கைதி பட தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபுவை சந்தித்து கைதி பட கதையை கூறியதாகவும் அதில் சிறு மாற்றம் செய்து  கைதி படத்தை அவர்கள் உருவாக்கி விட்டதாகவும் அதனால் கைதி இரண்டாம் பாகத்தை எடுக்க கூடாது என கேரள நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இதை விசாரித்த நீதிமன்றம் கைதி படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போதைக்கு எடுக்க கூடாது என உத்தரவிட்டுள்ளது.

பாருங்க:  நடிகர் சூரியை ஏமாற்றி மோசடி செய்த தயாரிப்பாளர்கள்
Previous articleபழனி முருகன் கோவிலில் முன் பதிவு கட்டாயம்
Next articleபிக்பாஸ் ஜோடிகளில் மோசமாக நடத்தப்பட்டதாக வனிதா புகார்