cinema news
காதல் கோட்டை படத்தின் 25ம் ஆண்டு விழா
காதல் கோட்டை படத்தின் 25ம் ஆண்டு விழா இன்று. கடந்த 1996ம் ம் ஆண்டு ஜூலை 12 இதே நாளில் வெளியானது காதல் கோட்டை திரைப்படம். இதை ஒட்டி தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் ஏற்பாடு செய்த விழாவில் காதல் கோட்டை பட இயக்குனர் அகத்தியன், அப்பட கதாநாயகி தேவயானி, அப்பட ஒளிப்பதிவாளர் தங்கர் பச்சான் அப்பட இசையமைப்பாளர் தேவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இயக்குனர் அகத்தியன் வீட்டிலும் 25ம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
வித்தியாசமான கதையம்சத்துடன் வந்து வெற்றி பெற்ற படம் இது. பார்க்காமலே காதல் என்ற கதை தமிழ் சினிமாவில் புதுமையான விசயம். பார்க்காமலே காதலித்து இறுதியில் காதலன் காதலி இணைவதுதான் கதை.