Entertainment
பாராட்டுக்களை பெற்று வரும் கடைசி விவசாயி திரைப்படம்
சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ஒரு திரைப்படம் கடைசி விவசாயி. விஜய் சேதுபதி, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்தில் ஒரு வயதான முதியவரே கதையின் நாயகனாக நடித்துள்ளார்.
விவசாயத்தை காக்கிறேன் என தேவையில்லாத வசனங்களை புகுத்தி பல வருடங்களாக ஹீரோயிசம் செய்த படங்களுக்கு மத்தியில் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக விவசாயம் என்றால் என்ன என்பதை கிராமத்து பாணி மற்றும் எளிய மனிதர்களின் வாழ்வியல் முறைகளை அழகாக இப்படம் படம்பிடித்து இருப்பதாகவும்
விவசாயம் என்றால் என்ன என்பதை இப்படம் தெளிவாக உரைத்து இருப்பதாகவும் விமர்சகர்கள் பலரால் இப்படம் பாராட்டப்பட்டு வருகிறது.
