Connect with us

கடைசி விவசாயி- தனது இசையை நீக்கியதாக இளையராஜா புகார்

Entertainment

கடைசி விவசாயி- தனது இசையை நீக்கியதாக இளையராஜா புகார்

காக்கா முட்டை படம் மூலம் கவனம் ஈர்த்தவர் மணிகண்டன். இந்த படத்துக்கு பிறகு குற்றமே தண்டனை என்ற படத்தை இயக்கினார் அந்த படத்துக்கு இளையராஜாதான் இசையமைத்தார். பிறகு மணிகண்டன் ஆண்டவன் கட்டளை என்ற படத்தையும் இயக்கினார்.

இந்த படமும் ஓரளவு வெற்றி பெற்றது. இந்த நிலையில் மணிகண்டன் விஜய் சேதுபதி, யோகிபாபு இன்னும் நல்லாண்டி எனும் முதியவர் ஒருவரை வைத்து கடைசி விவசாயி எனும் படத்தை இயக்கினார்.

இந்த படத்துக்கு இளையராஜாதான் இசையமைத்தார். பிறகு இளையராஜாவுடன் சிறு நெருடல் ஏற்பட்டதால் இளையராஜா இசையமைத்த இசைக்கோர்வையை பயன்படுத்தாமல் சந்தோஷ் நாராயணன் இசையை பயன்படுத்தி டிரெய்லர் வெளியிட்டுள்ளனர். படத்தையும் வெளியிட உள்ளனர்

இதனால் கோபமடைந்த இளையராஜா படக்குழுவினர் குறித்து இசையமைப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார். தன்னை இந்த அளவு யாரும் அவமானப்படுத்தியதில்லை எனவும் புகார் கொடுத்துள்ளார்.

பாருங்க:  இசைஞானியின் ஸ்டுடியோவுக்கு விசிட் அடித்த ரஜினிகாந்த்

More in Entertainment

To Top