Latest News
சர்வதேச கபடி வீரர் சுட்டுக்கொலை- பஞ்சாப் பயங்கரம்
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள மாலியன் குர்த் கிராமத்தில் நேற்று கபடி போட்டியின் போது பிரபல சர்வதேச கபடி வீரர் சந்தீப் சிங் நங்கலை குறிவைத்து அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர்.
அப்போது சுமார் 20 குண்டுகள் அவரது உடம்பில் பாய்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
சந்தீப் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பஞ்சாப் மட்டுமல்லாமல் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் கபடி போட்டிகளில் பங்கேற்று சிறப்பாக விளையாடி வருகிறார்.
மேலும் அவர் பெரிய லீக் கபடி கூட்டமைப்பை கவனித்து வருவதாகவும், அவருக்கு கூட்டமைப்பிற்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்த சம்பவம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எனினும் இது குறித்த முழு தகவல் காவல்துறையினரின் விசாரணைக்குப் பின்னரே தெரிய வரும் என கூறப்படுகிறது.
