cinema news
அதிக எதிர்பார்ப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல்- இன்று ரிலீஸ் ஆகிறது
விஜய் சேதுபதி, சமந்தா, நயன் தாரா நடிப்பில் இன்று ரிலீஸ் ஆகும் திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இப்படத்தில் நயன் தாராவை திருமணம் செய்து சமந்தாவுடனும் குடும்பம் நடத்துவது போல காமெடியாக இப்படம் இயக்கப்பட்டுள்ளது.
இரு கதாநாயகிகளுக்கும் விஜய் சேதுபதிக்கும் இடையிலான ரொமான்ஸ் மற்றும் காமெடிகளை மையமாக வைத்து இப்படம் இயக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் கொஞ்ச காலமாகவே ரொம்ப வறட்சியாகவே படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. பல படங்கள் ஜனரஞ்சகமாக வந்து சென்றால்தானே சினிமா தொழில் சிறக்கும் ஆனால் அப்படி இல்லாமல் குறிப்பிட்ட நடிகர்களின் படங்களைத்தான் பார்த்தாக வேண்டும் என்ற கட்டாய நிலைமையில் ரசிகர்கள் இருந்து வருகின்றனர் . பல்வேறுவிதமான படங்கள் ரிலீஸ் ஆகவில்லை.
இந்நிலையில் இந்த படம்தான் நீண்ட நாட்களுக்கு பிறகு தியேட்டருக்கு சொல்லிகொள்ளும்படியான படமாக வர இருக்கிறது. தொடர்ந்து ரிலீஸாகி வந்த விஜய் சேதுபதியின் படங்கள் சில மாதங்களாக ரிலீஸ் ஆகவில்லை இந்த நிலையில் விஜய் சேதுபதியின் காத்து வாக்குல காதல் படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
விக்னேஷ் சிவன் இப்படத்தை இயக்கியுள்ளார்.