மனநோயாளி போல் பேசும் காத்து கருப்பு- அங்கீகாரம் கொடுக்கும் மக்கள்

51

டிக் டாக் மூலம் பிரபலமான ஜி.பி முத்து, ரவுடி பேபி சூர்யா, சாதனா, திவ்யா கள்ளச்சி என பலரும் இருக்கிறார்கள். இவர்கள் ஆபாசமாக பேசுவதாகவும் அருவருக்கத்தக்க பேசி வருவதாகவும் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த ஒருவர் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இது போல் இன்று மக்கள் அதிகாரம் என்ற அமைப்பும் இவர்கள் மீது புகார் கொடுத்துள்ளது. ஆன்லைன் க்ளாஸ் படிக்கும் மாணவர்களை இவர்களின் வீடியோ கெடுப்பதாக உள்ளதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இவர்கள் ஒரு பக்கம் இருந்தாலும் காத்து கருப்பு களை என்ற ஒருவர் கிறுக்குத்தனமாக அப்பாவித்தனமாக பேசி வரும் வீடியோக்களும் பிரபலமாகி வருகிறது. இவர் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவராவர்.

இவர் எந்த நேரமும் ஏதாவது மன நோயாளி போலவே பேசி வருகிறார். யாரும் என்னை காதலிக்க மாட்டிங்களா என்றே ஓப்பன் ஆகவும் முகத்தை அழுதுகொண்டும் அப்பாவி போலவும் வைத்துக்கொண்டு பேசி வருகிறார். இது போல வீடியோக்களை பார்ப்பதற்கென்றே மிகப்பெரும் கூட்டமும் உள்ளது இதன் மூலம் சப்ஸ்க்ரைபர்ஸ் அதிகமாகி ஒன்றுமே இல்லாத வீடியோவுக்கு பல ஆயிரம் பணம் கிடைக்கிறது இதன் மூலம் அவர்கள் புகழும் பெறுகிறார்கள்

பாருங்க:  ரஹ்மானை உச்சத்தில் ஏற்றிய ரங்கீலா -25ம் ஆண்டு விழா
Previous articleடெல்டா ப்ளஸ் விஜயகாந்த் எச்சரிக்கை
Next articleபிரசாந்த் வழங்கிய கொரோனா நிவாரண நிதி