இயக்குனர் கே.வி ஆனந்த் மரணம்

12

1994ல் வெளிவந்த தேன்மாவின் கொம்பத் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் கே.வி ஆனந்த். இவர் அதற்கு முன் முக்கிய ஒளிப்பதிவாளர்களிடம் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர்.

ஷங்கரின் முதல்வன், சிவாஜி  உள்ளிட்ட பல முக்கிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கேவி ஆனந்த், கனா கண்டேன் படம் மூலம் இயக்குனர் அவதாரமும் எடுத்தார்.

தொடர்ந்து அயன், மாற்றான், கவன், காப்பான் என பல படங்களை இயக்கினார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்த இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான கே.வி ஆனந்த் இன்று காலை மாரடைப்பால் காலமானார்.

பாருங்க:  பட்டைய கிளப்பும் ‘காப்பான்’ டிரெய்லர் வீடியோ...
Previous articleஜூன் 18 முதல் ஜகமே தந்திரம்
Next articleஅசத்தும் கேவி ஆனந்தின் பழைய புகைப்படம்