ஜூன்  2 மற்றும் 3ம் தேதிகளில் இவ்வளவு பிரபலங்கள் பிறந்த நாளா ஆச்சரியம்தான்

ஜூன் 2 மற்றும் 3ம் தேதிகளில் இவ்வளவு பிரபலங்கள் பிறந்த நாளா ஆச்சரியம்தான்

ஜூன் மாதம் 2ம் தேதி வந்து விட்டாலே இளையராஜாவின் பிறந்த நாள் ஞாபகம் வந்து விடுகிறது .ஆனால் அவரின் பிறந்த நாள் ஜூன் 3 அன்றுதான் வருகிறது.

அன்றைய தினம் முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்த நாள் என்பதால், ஒரு நாள் முன்பே இளையராஜா தன் பிறந்த நாளை கொண்டாடுகிறார் என சொல்லப்படுகிறது.

ஜூன் 2 மற்றும் 3ம் தேதிகளில் அளவுக்கு அதிகமான பிரபலங்களின் பிறந்த நாட்கள் வருகிறது. முக்கியமாக இன்றைய தினம் இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாள் மட்டுமின்றி, தமிழ் திரையுலகில் பல சாதனை படைத்த இயக்குனர் மணிரத்னத்தின் பிறந்த நாளும் இன்றுதான்.

அது போல அரசியலில் புகழ்பெற்று இன்று கவர்னராக இருக்கும் முன்னாள் பாரதிய ஜனதா தமிழக தலைவராகவும் இருந்த தமிழிசை செளந்தர்ராஜன் அவர்களின் பிறந்த நாளும் இன்றுதான்.

அலைபாயுதே படம் மூலம் அறிமுகமாகி இன்று ராக்கெட்ரி படம் வரை அசத்தும் நடிகர் மாதவனின் பிறந்த நாளும் இன்றுதான் வருகிறது. அது போல வரும் ஜூன் 3 அன்று முத்தமிழறிஞர் முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்த நாளும் வருகிறது.

ஜூன் 4ல் பாடகர் எஸ்.பி.பி அவர்களின் பிறந்த நாள் வருகிறது. இவ்வளவு முக்கிய பிரபலங்களின் பிறந்த நாள் இந்த இரண்டு நாட்களில் மட்டும் வருவது ஆச்சரியமான விசயம்தான்.