---Advertisement---

“ஜூன் 2 மிஸ் ஆயிடுச்சு – ஆனா செப்டம்பர் 13 மிஸ்ஸே ஆகாது”. பாராட்டு விழா!! நடத்தும் தமிழக அரசு!!

By Sri
Published on: September 10, 2025
Ilayaraja Golden Jubliee
---Advertisement---

உலகத்தையே தன் இசையால் ஆண்டு வரும் இசைஞானி அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டுள்ளது.

1975 ஆம் ஆண்டு தமிழில் வெளியான “அன்னக்கிளி” என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் “ஞான தேசிகன்” என்ற இயற்பெயர் பெற்ற “திரு. இசைஞானி இளையராஜா.” 

இதனை அடுத்து, இசைஞானி அவர்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் இசையமைத்துள்ளார். அது மட்டுமல்லாது, இசை மீது அவர் கொண்ட ஆர்வத்தால் மேற்கத்திய இசைக்கருவிகளை கையாளும் பயிற்சியும் பெற்றுள்ளார்.

“ஜூன் 2 மிஸ் ஆயிடுச்சு – ஆனா செப்டம்பர் 13 மிஸ்ஸே ஆகாது”. பாராட்டு விழா!! நடத்தும் தமிழக அரசு!!

இளையராஜாவின் திரையுலகில்  50 ஆண்டு நிறைவு செய்ததை ஒட்டி , வரும் செப்டம்பர் 13-ஆம் தேதி மாலை 5:30 மணிக்கு “நேரு உள்விளையாட்டு அரங்கத்தில்” (Nehru Stadium) மாபெரும் பாராட்டு விழா நடைபெற உள்ளது.

தமிழக முதல்வர் திரு. மு க ஸ்டாலின் அவர்கள், இசைஞானியின் பிறந்த நாளை ஒட்டி ஜூன் 3-ஆம்  தேதி இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடைபெறுவதாக அறிவுத்திருந்தார். ஆனால் ஒரு சில காரணங்களால், அது தள்ளி  போடப்பட்டது.  முடிவாக, வரும் செப்டம்பர் 13-ஆம் தேதி மகா-விழா எனக் குறிப்பிட்டு தமிழக அரசே இதனை ஏற்றுக்கொண்டு நடத்த உள்ளது.  இவ்விழா இசைஞானி அவர்களை கௌரவப்படுத்தும் விதமாக  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த விழாவில் திரைத்துறையில் உள்ள அனைத்து தரப்பினரும் , அரசியல் தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதனைக் குறித்து இசைஞானி அவர்கள் சமூக ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், “உங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சியோ, அதே அளவுக்கு எனக்கும்  மகிழ்ச்சி தான்” என்று தன் கொள்ளான மகிழ்ச்சியை பகிர்ந்து உள்ளார்.

இசை மாமன்னான இளையராஜா, அவர்களுக்கு தமிழக அரசே, அவரை கௌரவப்படுத்தும் விதமாக நடத்தப்படும் விழாவிற்கு ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும், அதிக அளவிலான எதிர்பார்ப்பையும் கூட்டி உள்ளது.

Sri

পড়তে ভুলবেন না

ரவி மோகன் மற்றும் கெனிஷா பிரான்சிஸ் பிறந்தநாள் புகைப்படம்

நடிகர் ரவி மோகன் உடனான உறவு: கெனிஷா பிரான்சிஸின் வைரல் பிறந்தநாள் பதிவு மற்றும் உருக்கமான விளக்கம்!

டாக்டர் ஸ்ரீலீலா தனது எம்பிபிஎஸ் பட்டத்துடன் இருக்கும் புகைப்படம்

டாக்டர் ஸ்ரீலீலா: மும்பை டி.ஒய் பாட்டீல் பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்றார் நடிகை ஸ்ரீலீலா!

ஏழுமலை 2 அப்டேட் கொடுக்கும் நடிகர் அர்ஜுன்

ஏழுமலை 2 படத்தின் கதை தயார்: இனி வில்லன் வேடங்களில் நடிக்கப்போவதில்லை என நடிகர் அர்ஜுன் அறிவிப்பு!

ஜென்சன் திவாகர் பேட்டி மற்றும் எதார்த்தமான கதாபாத்திரங்கள்

“பணம் வந்தவுடன் எலைட் ஆக முடியாது”: எதார்த்தமான கதாபாத்திரங்கள் குறித்து ஜென்சன் திவாகர் விளக்கம்!

சிரஞ்சீவி புனாதி ராள்ளு படப்பிடிப்பு தளப் புகைப்படம்

மெகாஸ்டார் சிரஞ்சீவி நெகிழ்ச்சி: ‘புனாதி ராள்ளு’ படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு நினைவுகள்!

அனகனக ஒக்க ராஜு நெட்ஃபிக்ஸ் ஓடிடி வெளியீடு

நவீன் பொலிசெட்டியின் ‘அனகனக ஒக்க ராஜு’ நெட்ஃபிக்ஸ் ஓடிடியில் வெளியீடு: 5 மொழிகளில் ஸ்ட்ரீமிங்!