Entertainment
ஜூகி ஜாவ்லாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை தள்ளுபடி செய்ய கோரி வழக்கு
90களில் ஹிந்தியில் புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர் நடிகை ஜூகி ஜாவ்லா. சமீப காலமாக 4ஜி தொழில் நுட்பம் நிறைவுற்று 5ஜி தொழில் நுட்பம் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
5ஜி தொழில் நுட்பம் தவறானது என அதை தள்ளுபடி செய்ய வேண்டும் என ஹிந்தி நடிகை ஜூகி ஜாவ்லா கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த கோர்ட் 5ஜி தொழில் நுட்பம் தேவையென்றும் வெற்று விளம்பரத்துக்காக ஜூகி சாவ்லா வழக்கு தொடர்ந்துள்ளதாக அவருக்கு 20 லட்சம் அபராதம் விதித்தனர்.
இந்த அபராதத்தைத் தள்ளுபடி செய்ய கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடிகை ஜூஹி சாவ்லா மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்நிலையில் ஜூஹி சாவ்லா உள்ளிட்ட 3 பேர் அபராதத் தொகையை செலுத்த நீதிமன்றம் உத்தரவிட கோரி டெல்லி மாநில சட்டச் சேவை ஆணையம் (டிஎஸ்எல்எஸ்ஏ) டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகியது.
