கரூர் நாடாளுமன்ற தொகுதியின் எம்.பியாக இருப்பவர் ஜோதிமணி. இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவராவார். அதனால் திமுக கூட்டணியுடன் நெருக்கமாக இருப்பவர்.
நேற்று கரூரில் நடந்த திமுக கூட்டத்தில் ஜோதிமணியை உதாசீனப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இது சம்பந்தமான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இது குறித்து கருத்து கூறியுள்ள நடிகையும் அரசியல் விமர்சகருமான கஸ்தூரி பேய்க்கு வாக்கப்பட்டால் பேய்க்கு வாக்கப்பட்டா புளிய மரத்துல தொங்கித்தான் ஆகவேண்டும் என்பது
செல்வி ஜோதிமணிக்கு தெரியாதா என்ன? யாருக்கும் வாரிசாக இல்லாமல் தனியொரு பெண்ணாக திமுக கூடாரத்தில் மரியாதை எதிர்பார்க்க அவருக்கு என்ன தைரியம் என கேள்வி எழுப்பியுள்ளார்.