Latest News
ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளையனை பிடித்த போலீசாருக்கு பாராட்டு குவிகிறது
கடந்த சில நாட்களுக்கு முன் வேலூர் ஜோஸ் ஆலுகாஸ் ஷோருமில் பல லட்சம் மதிப்புள்ள நகைகள் திருடு போயின. சிங்க முகமூடி போட்டு உள்ளே சென்ற திருடன் நகைகளை திருடி செல்வது சிசி டிவி காட்சிகளில் தெரிந்தது.
இந்த நிலையில் நகைகளை திருடி சென்றது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில் அந்த பகுதியை சேர்ந்த டீக்காராமன் இந்த செயலை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
டீக்காராமன் ஒரு கட்டிட வேலை செய்பவர் ஆவார். சில நாட்கள் முன்பு அவர் ஒரு பள்ளிக்கூடத்தில் வேலை செய்தபோது அங்குள்ள லேப்டாப்களை திருடி பிடிபட்டவர்.
அவனின் உடல்மொழிகளை வைத்து அவன் தான் எடுத்திருப்பான் என முடிவுக்கு வந்த போலீஸ் டீக்காராமனை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் டீக்காராமன் நகைகளை திருடி சுடுகாட்டில் மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அவனிடம் இருந்து 15 கிலோ தங்க நகைகள் கைப்பற்றப்பட்டது மேலும் 500 கிராம் வைர நகைகளும் மீட்கப்பட்டது.
இந்த வழக்கில் விரைவாக செயல்பட்டவர்களை பல போலீஸ் அதிகாரிகளும் மக்களும் பாராட்டி வருகின்றனர்.
professionalism, duty and hard work in display. well done vellore district police 💐 @AspVellore @VellorePolice #TNPolice pic.twitter.com/HfwUPS0We4
— Vijayakumar IPS (@vijaypnpa_ips) December 21, 2021
