நீண்ட நாளுக்கு பிறகு இணைந்த நண்பர்கள்

74

அவன் இவன் படத்தில் ஹைனஸ் ஆக நடித்து ஒரு கலக்கு கலக்கியவர் இயக்குனர் ஜி.எம் குமார். இவர் 80களில் வந்த பாக்யராஜ் படங்களில் உதவி இயக்குனராக கதை ஆலோசகராக பணியாற்றியவர். பாக்யராஜ் இயக்கிய முந்தானை முடிச்சு உள்ளிட்ட படங்களில் பணிபுரியும்போது அவருடன் இணைந்து பணிபுரிந்தவர் நடிகர் லிவிங்ஸ்டன்.

ஜி.எம் குமாரும் லிவிங்ஸ்டனும் மிக நெருங்கிய நண்பர்கள். கமல் நடித்த காக்கிச்சட்டை படத்தின் கதை லிவிங்ஸ்டனுடையது இது போல கதை விவாதங்களில் நண்பருடன் சேர்ந்து பங்கு கொண்டவர் ஜி.எம் குமார்.

நீண்ட நாள் நண்பர்கள் இருவரும் நீண்ட நாள் கழித்து சந்தித்து நலம் விசாரித்து கொண்டனர். அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஜி.எம் குமார்.

பாருங்க:  பெற்ற மகன்களுக்கு ஜி.எம் குமாரின் அட்வைஸ்
Previous articleசசிகலா விலகல்- கஸ்தூரியின் டுவிட்
Next article16 வது வருடத்தில் தமன்னா