Food and Kitchen tips
சூடான வெயிலுக்கு அழகான கம கம மோர் அருந்துங்கள்
அடிக்கிற வெயிலில் கண்ட குளிர்பானங்களையும் வாங்கி குடித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்றே அனைவருக்கும் தோன்றும். கண்ட கண்ட மேலைநாட்டு குளிர்பானங்களை அருந்துவதை விட மோர் மிக எளிய அரிய அருமையான பானமாகும்.
உடலுக்கு எந்த கேட்டையும் மோர் தந்து விடாது. ஆனால் மோரை சும்மா அருந்துவதை விட கம கம என குடிப்பதுதான் சூப்பராக இருக்கும்.
மோர் எப்போதும் நீர் மோர் என்று சொல்லக்கூடிய வகையில் இருக்க வேண்டும்.கெட்டியாக இருப்பதை விட அதிக தண்ணியாக மோர் இருந்தால் நம் தாகம் தீரும் குடிப்பதற்கும் நன்றாக இருக்கும்.
மோரில் கடுகு, உளுந்து, பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி எண்ணெய்யில் தாளித்து சேர்த்துக்கொண்டால் மோர் குடிப்பதற்கு அவ்வளவு சுவையாக இருக்கும் ஒரு கிளாஸ் மோருக்கு சிறிதளவு எலுமிச்சையும் பிழிந்து விட்டுக்கொள்ளலாம்.
