Latest News
ஜீவசமாதி மகான்களின் வழிகாட்டுதலை பெற எளிய வழி
ஜீவசமாதியில் இருக்கும் மகான்களின் அருளைப்பெறும் வழிமுறை!!!
மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் ஜீவசமாதி ஆக முடியும்.
அதற்கு விடா முயற்சி தேவை.
யாருக்கெல்லாம் கர்மவினைகள் என்று சொல்லக்கூடிய பாவமும் புண்ணியமும் பூஜ்ய நிலைக்கு வருகின்றதோ அவர்கள் யாராக இருந்தாலும் ஜீவசமாதி ஆகமுடியும்.
1990 வரை நம்முடைய ஆன்மீக தமிழ்நாட்டில் பல மகான்கள் ஜீவ சமாதி ஆகியுள்ளார்கள்.
சராசரி மனிதராக இருக்கும் ஒவ்வொருவரும் ஒரு நிமிடத்திற்கு 16 முறை மூச்சு விடுவார்கள்.
சரக்கலை கற்றுக் கொள்ள ஆரம்பித்தால் அல்லது பிராணயாமம் கற்றுக் கொள்ள ஆரம்பித்தால் ஒரு நிமிடத்திற்கு 16 முறை என்று மூச்சுவிடும் அளவு குறைய ஆரம்பிக்கும்.
ஒரு நிமிடத்திற்கு ஒருமுறை மட்டும் மூச்சு விடக் கூடியது ஆகும் ஆமை ஆகும்.
அதனால்தான் அது ஆயிரம் வருடங்கள் வரை நம் பூமியில் வாழ்ந்து வருகிறது.
அந்த ஆமையிடம் நம்முடைய முன்னோர்களாகிய சித்தர்கள் கற்றுக் கொண்டதுதான் இந்த சாகாக்கலை என்ற ஜீவசமாதி வழிமுறை!!!
ஜீவசமாதியில் பல்வேறுவிதமான ஜீவ ஐக்கிய முறைகள் உள்ளன .
தகுந்த குருவின் வழிகாட்டுதல் இருந்தால் யாராக இருந்தாலும் ஜீவ சமாதி முடியும் .
ஆனால் நமக்கு கர்ம வினைகள் அதிகமாக இருப்பதால் பல்வேறு விதமான கர்மங்களால் நாம் ஒவ்வொருவரும் தவியாய் தவித்தது கொண்டு இருக்கிறோம்.
எனவே இந்த ஜீவசமாதியில் தவம் இருந்து தவம் செய்து கொண்டிருக்கும் மகான்களின் அருளாசியைப் பெற நாம் முயற்சி செய்தால் போதுமானது .
அதுவும் ஒருவித ஆன்மீக முயற்சிதான்.
எல்லா நாளும் மாலை ஐந்து முப்பது முதல் 7 மணி வரை ஜீவ சமாதியில் உள்ள மகான்களின் அருளாற்றல் வெளிப்படும் .
மனச் சஞ்சலம் உள்ளவர்கள் திங்கட்கிழமை மாலை 5.30 முதல் 7 மணி வரை ஜீவ சமாதியில் உள்ள மகானுக்கு பின்வரும் பொருட்களை வைத்து பிரார்த்தனை செய்ய வேண்டும் .
அவ்வாறு தொடர்ந்து 8 திங்கட்கிழமை பிரார்த்தனை செய்வதன் மூலமாக மனசஞ்சலம் படிப்படியாக விலகி விடும்.
வீடு மனை நிலம் மற்றும் பூர்வீக சொத்து பிரச்சனை உள்ளவர்கள் செவ்வாய்க்கிழமை மாலை 5.30 முதல் 7 மணி வரை ஜீவ சமாதியில் உள்ள மகானுக்கு பின்வரும் பொருட்களை வைத்து பிரார்த்தனை செய்ய வேண்டும். அவ்வாறு தொடர்ந்து 8 செவ்வாய்க் கிழமை பிரார்த்தனை செய்வதன் மூலமாக பூமி சார்ந்த பிரச்சனைகள் படிப்படியாக தீர்ந்து விடும்.
உங்களுக்கு அல்லது உங்களுடைய குழந்தைகளுக்கு அல்லது உங்களுடைய உறவினர்களில் யாராவது ஒருவருக்கு படிப்பில் போதிய அக்கறை வராமலிருந்தால் அவர்கள் நன்றாக படிப்பதற்கு புதன்கிழமை மாலை 5.30 முதல் 7 மணி வரை ஜீவ சமாதியில் உள்ள மகானுக்கு பின்வரும் பொருட்களை வைத்து பிரார்த்தனை செய்ய வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து 8 புதன்கிழமைகள் பிரார்த்தனை செய்வதன் மூலமாக அவர்களுக்கு கல்வியில் தடைகள் நீங்கி மகத்தான சாதனைகள் செய்யக்கூடிய அருளாசி கிடைக்கும்.
குரு தோஷம் விலகவும் ,
தகுந்த குரு அமைவதற்கும்,
தங்க நகைகள் வாங்குவதற்கும், ஆன்மீகம் தொடர்பான பல தெய்வீக ரகசியங்கள் கிடைப்பதற்கும் வியாழக்கிழமை அன்று மாலை 5.30முதல் 7 மணி வரை பின்வரும் பொருட்களை ஜீவசமாதியில் உள்ள மகான் சன்னதியில் வைத்து பிரார்த்தனை செய்ய வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து எட்டு வியாழக்கிழமைகள் பிரார்த்தனை செய்து வருவதன் மூலமாக குரு தொடர்பான சிக்கல்கள் தீர்ந்துவிடும்.
விரக்தி ,வெறுப்பு, அவமானம்,
வேலையின்மை,
வருமானப் பற்றாக்குறை,
உறவினர்கள் அவமானப்படுத்துதல்,
கணவன் மனைவி குழந்தைகளுக்கு ஒற்றுமையின்மை,
நிம்மதி இல்லாத தினசரி வாழ்க்கையை வாழ்பவர்கள்
அதிலிருந்து மீண்டு
நிம்மதியான ஒற்றுமையான போதுமான வருமானம் கிடைக்கக்கூடிய வேலை அல்லது தொழில் அமைய சனிக்கிழமை அன்று மாலை 5.30 முதல் 7 மணிக்குள் பின்வரும் பொருட்களை ஜீவசமாதியில் உள்ள மகானின் சந்நிதியில் வைத்து பிரார்த்தனை செய்ய வேண்டும்.
தொடர்ந்து 8 சனிக்கிழமை இவ்வாறு செய்து வருவதன் மூலமாக சோகமான வாழ்க்கையை பெருமளவு விடுபட்டு நிம்மதியான வாழ்க்கை வாழலாம்.
அரசுப்பணியில் சேர விரும்புபவர்கள்,
அரசு பணியில் ஏற்கவே சேர்ந்து வேலைப்பளு மற்றும் உயர் அதிகாரிகளின் தொல்லையால் தவித்துக் கொண்டு இருப்பவர்கள்
அதிலிருந்து மீள்வதற்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாலை 5.30 முதல் 7 மணி வரை பின் வரும் பொருட்களை கொண்டு ஜீவ சமாதியில் உள்ள மகானின் சன்னதியில் வைத்து பிரார்த்தனை செய்ய வேண்டும்.
தொடர்ந்து எட்டு ஞாயிற்றுக்கிழமை இவ்வாறு செய்து வருவதன் மூலமாக அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு அடுத்த ஒரு சில ஆண்டுகளில் வேலை கிடைக்கும்.
அரசு வேலையில் சேர்ந்து நிம்மதி இல்லாமல் தவிப்பவர்கள் நிம்மதியை அடுத்த சில வாரங்களில் பெற்றுவிடுவார்கள்.
ரோஜா மாலை நெய்தீபம் டைமண்ட் கல்கண்டு வாசமுள்ள பத்தி ஐந்து வகை பழங்கள் வெஜிடபிள் பிரியாணி இவைகளை மகானின் சன்னதியில் வைத்து குறைந்தது 30 நிமிடங்கள் முதல் அதிகபட்சம் 90 நிமிடங்கள் வரை பிரார்த்தனை செய்ய வேண்டும்.
அதன்பிறகு அங்கே உள்ள டைமண்ட் கல்கண்டு பாதியையும் இரண்டு வாழை பழங்களையும் முறைப்படி வாங்கிக்கொண்டு வீட்டுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
அவற்றை வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிட வேண்டும்.
ஜீவசமாதியில் இருந்து அருள்பாலிக்கும் மகான்களின் நேரடி தரிசனம் மற்றும் சுற்றுலா வழிகாட்டுதல் கிடைப்பதற்கு பின்வரும் நாட்களில் (குறிப்பிட்ட நேரம் வரை அல்லது குறிப்பிட்ட நேரத்தில் இருந்து) ஆறு வகையான அன்னங்கள் படையல் வைத்து அன்னதானம் செய்ய வேண்டும். இந்த தெய்வீக நாட்கள் ஒரு வருடத்திற்கு அதிகபட்சம் 10 நாட்கள் மட்டுமே வரும்.
17.5.2022 செவ்வாய் மதியம் 12.42 க்கு பிறகு
14.6.2022 செவ்வாய்
21.3.2023 செவ்வாய்
12.4.2023 செவ்வாய் மதியம் 12.20 வரை
இவ்வாறு தொடர்ந்து மூன்று ஆண்டுகள் செய்து வருவதன் மூலமாக அந்த மகானின் அருள் ஆசி மற்றும் சூட்சும வழிகாட்டுதல் கிடைக்கும்.
சிவராஜயோக ஜோதிடர்
வீரமுனி ஸ்வாமிகள்
9629439499
ராஜபாளையம்