Latest News
ஜீது ஜோசப் இயக்கத்தில் நடிக்கிறாரா ரஜினிகாந்த்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்தே படத்தை முடித்து ஓய்வில் இருக்கிறார். அடுத்த படத்தை விரைவில் ஆரம்பிக்க இருப்பதாகவும் அவர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் இன்னும் சில இயக்குனர்களின் பெயர்களும் அடிபடுகின்றன.
இதற்கு மேலே ரஜினி ரசிகர்கள் சிலர் அவர் ஜீது ஜோசப் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்களை பரப்பி விட்டுள்ளனர்.
ரஜினிகாந்த் ஜீது ஜோசப் போல ஒரு க்ரைம் கதை ஸ்பெஷலிஸ்ட் படத்தில் நடிப்பதை ரஜினி ரசிகர்கள் விரும்புகின்றனர்.
ரசிகர்களின் எண்ணம் அறிந்து ரஜினி நடிப்பாரா என்று பார்ப்போம். ரஜினியும் இது போல வித்தியாசமான மலையாள டைப் கதையான மணிசித்ர தாழுவின் ரீமேக்கான சந்திரமுகி படத்தில் நடித்தது அவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
இப்போ நீங்க @rajinikanth அடுத்த படம் அறிவிப்பு குடுக்கிறீங்களா இல்லயா? 🤔
எல்லா பக்கமும் அப்டேட் னு உசுர வாங்குறாய்ங்க 😂
கிரைம் திரில்லர் + ஜீத்து ஜோசப் + அனிருத் + தானு காம்போ னு இறக்குங்க#Thalaivar169 pic.twitter.com/vcXY8R06wW— RajaGuru (@swatson2022) December 15, 2021
