Connect with us

Latest News

வட்டாட்சியர் அலுவலக ஜீப்பை தீயிட்டு கொழுத்தியவர் கைது

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் வாகனத்துக்கு தீ வைத்த இளைஞரை போலீஸார் இன்று கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு இன்று வந்த இளைஞர் ஒருவர், அலுவலக வாயிலில் நின்றிருந்த வாகனத்தின் கண்ணாடியை உடைத்து, பெயின்ட்க்கு பயன்படுத்தப்படும் வார்னிஷை வாகனத்தினுள் ஊற்றி தீ வைத்து அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

வாகனம் தீப்பற்றி எரிவதைக் கண்ட, அருகிலிருந்த சிலர் உடனடியாக கண்டாச்சிபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.

இதையடுத்து போலீஸார் தீயணைப்பு வாகனத்துடன் சம்பவ இடத்திற்குச் சென்று தீயை அணைத்தனர். பின்னர் அங்கிருந்த சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்தபோது, மர்ம நபர் வாகனத்திற்கு தீ வைத்தது தெரியவந்தது.

இதையடுத்து விசாரணை நடத்தியபோது, கண்டாச்சிபுரம் இந்திராநகர் காலனியைச் சேர்ந்த ரமேஷ் மகன் ரஞ்சித்(25) என்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து அவரை பிடித்துவந்த போலீஸார் அவரிடம் நடத்திய விசாரணையில், வட்டாட்சியர் அலுவலகத்தில் எந்த வேலைக்குச் சென்றாலும் லஞ்சம் கேட்பதாகவும், அதனால் ஆத்திரத்தில் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து போலீஸார் அவர் மீது வழக்குப் பதிவுசெய்து கைது செய்தனர்.

 

பாருங்க:  ரிலீசுக்கு முன்பே சர்வதேச திரைப்பட விழா சென்ற சினிமா

Entertainment

மோகன்லால் நடிக்கும் மரைக்காயர் படத்தின் தமிழ் டிரெய்லர்

மோகன்லால் நடிப்பில் மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பிரமாண்டமாக வெளிவர இருக்கும் படம் மரைக்காயர் அரபிக்கடல் சிங்கம். பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளிவர இருக்கும் இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

பாருங்க:  வீட்டிலேயே கிருமிநாசினி செய்வது எப்படி? – நீலகிரி மாவட்ட ஆட்சியர் விளக்கம்!
Continue Reading

Entertainment

உதயநிதி படத்தில் வடிவேலு

பரியேறும் பெருமாள்,கர்ணன் படங்களுக்கு பிறகு மாரி செல்வராஜ் ஒரு படம் இயக்கி வருகிறார். உதயநிதி நடிக்க இருக்கும் இப்படத்தில் உதயநிதியுடன் வடிவேலுவும் நடிக்கிறாராம்.

இந்த படத்தில் தற்போது வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் தயாரிப்பாளர்களுடன் ஏற்பட்டிருந்த பிரச்சினைகளை நடிகர் வடிவேலு சுமூகமாக தீர்த்துக் கொண்டார்  தற்போது புதிய படங்களில் இவர் நடிக்க ஒப்பந்தமாகி வருவது குறிப்பிடத்தக்கது.

பாருங்க:  மருத்துவமனையில் இருந்த கொரோனா பாதிக்கப்பட்ட இளைஞர்! தப்பியோடியதால் பரபரப்பு!
Continue Reading

Latest News

ஐபிஎஸ் அதிகாரிகள் இட மாற்றம்

தமிழ்நாட்டில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றி அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை புளியந்தோப்பு காவல் ஆணையராக ஈஸ்வரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளரான விஜயகுமார் மாற்றப்பட்டு அரவிந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை காவல்துறை பயிற்சி கல்லூரி முதல்வராக மணிவண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை தெற்கு மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பியாக விஜயகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பாருங்க:  மீன் வறுவல் பற்றி கற்றுகொடுத்த மோகன்லால்
Continue Reading

Trending