உற்சாகத்தில் ஜெயம் ரவி.. கோமாளி பட வசூல் தெரியுமா?..

உற்சாகத்தில் ஜெயம் ரவி.. கோமாளி பட வசூல் தெரியுமா?..

ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள கோமாளி திரைப்படம் நல்ல வசூலை பெற்றுள்ளது.

இளம் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம்ரவி, யோகிபாபு, காஜல் அகர்வால் உள்ளிட்ட பலரும் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் கோமாளி. இப்படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்ததால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தனி ஒருவருனுக்கு பின் கோமாளி திரைப்படம் ஜெயம் ரவிக்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது. படம் வெளியாகி 6 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இப்படம் ரூ. 25 கோடியை வசூல் செய்துள்ளது.

ஜெயம்ரவி நடித்த படங்களிலேயே கோமாளி திரைப்படம் அதிக வசூலை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் வெற்றி ஜெயம்ரவிக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.