வேதா இல்லம் நினைவு இல்லமாகுமா? போயஸ் கார்டன் மக்களிடம் கருத்து கேட்பு!

வேதா இல்லம் நினைவு இல்லமாகுமா? போயஸ் கார்டன் மக்களிடம் கருத்து கேட்பு!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அவரது நினைவு இல்லமாக ஆக்குவது தொடர்பான பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தை அவருடைய நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்று கோடிக்கணக்கான அதிமுக தொண்டர்கள் வேண்டுகோளை அடுத்து இதற்கான பணிகளை அரசு செய்து வந்தது.  அதற்கு ஜெயலலிதாவின் ரத்த வாரிசான ஜெ தீபா மற்றும் டிடிவி தினகரன் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

இந்நிலையில் போயஸ் கார்டன் பகுதி மக்களின் கருத்தை கேட்டறிந்த தமிழக அரசு நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், ஜெயலலிதாவின் இடத்தை கையகப்படுத்துவதால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதனால் விரைவில் அடுத்தக் கட்ட பணிகள் நடைபெறும் எனத் தெரிகிறது.