ரஜினிக்கு என் வாழ்த்துக்கள் – அமைச்சர் ஜெயக்குமார்

249

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் தனது ஆதரவு இல்லை எனக் கூறியுள்ள ரஜினிகாந்துக்கு அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரஜினி சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுருந்தார். அதில், வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை. சட்டமன்ற தேர்தலே எங்கள் இலக்கு. நாடாளுமன்ற தேர்தலில் என்னுடைய ஆதரவு எந்த கட்சிக்கும் இல்லை. தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சனை தண்ணீர். அதை தீர்ப்பார்களோ அவர்களுக்கு நீங்கள் சிந்தித்து வாக்களியுங்கள் என குறிப்பிட்டிருந்தார்.

இதுபற்றி கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார் “ ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை உள்லது. தேர்தலில் வெற்றி பெற்று மக்களுக்கு நல்லது செய்வதே அதிமுகவின் கொள்கை. எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து அதைத்தான் செய்து வருகிறோம். அதோபோல், ரஜினி அவருடைய கொள்கையை கூறியுள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.

பாருங்க:  வாழ்த்து கூறிய ரஜினி.. நன்றி கூறிய கமல்ஹாசன்