கெட்ட வார்த்தை போட்டி வைத்தால் முதலிடம் பிடிப்பேன் – ஜெயக்குமார் பேட்டி

270

திமுகவினருக்கும், அதிமுகவினருக்கும் கெட்ட வார்த்தை பேசுவதில் போட்டி வைத்தால் நான் முதலிடம் பிடிப்பேன் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற பயிற்சி முகாமில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில், சிறப்பு விருந்தினராக ஜெயக்குமார் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சி முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து அதிமுகவினரை கடுமையாக விமர்சித்து வருகிறார். வி.பி.துரைசாமி உள்ளிட சில திமுகவினர் அதிமுகவினரை தகாத வார்த்தைகளால் திட்டி வருகின்றனர். இதை அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையேல் நாங்களும் பேசுவோம். கெட்ட வார்த்தை பேசும் போட்டி வைத்தால் நான் முதலிடம் பிடிப்பேன்’ என அவர் தெரிவித்தார்.

பாருங்க:  சுபஸ்ரீயின் மரணம் தற்செயலானது.. எல்லாம் விதி... இப்படி பேசலாமா பிரேமலதா?