Tamil Flash News
ஆள்மாறட்டத்தை கற்றுக் கொடுத்ததே கமல்தான் – ஜெயக்குமார் அடேடே பேட்டி
சமீபத்தில் லயோலா கல்லூரி மாணவர்களிடையே கமல்ஹாசன் பேசும் போது ‘இளைஞர்கள் அரசியல் பேச வேண்டும். அரசியலுக்கு வரவேண்டும். எல்லாவற்றையும் கரைவேட்டி கட்டியவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என நினைக்கக் கூடாது. அப்படி நினைத்ததால்தான் அரசியலில் கறை பட்டுவிட்டது என பேசினார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார் ‘கமல் ஒரு இன்ஸ்டண்ட் சாம்பார் ஃபுட் மாதிரி. திடீரென வருவார். பின்னார் காணாமல் போய்விடுவார். தேர்தல் நேரத்தில் மட்டுமே வருவார். பின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போய்விடுவார். பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு கலாச்சார சீரழிவு. வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தின் மூலம் ஆள்மாறாட்டத்தை கற்றுக்கொடுத்ததே கமல்ஹாசன்தான். கல்லூரி மாணவர்கள் முன்பு அரசியல் பேசுவது தவறு’ என அவர் பேசினார்.
கமல்ஹாசன் சரியாகத்தான் பேசியிருக்கிறார். மாணவர்கள் எங்கே விழிப்புணர்வு அடைந்துவிடுவார்களோ என்கிற பயத்தில் ஜெயக்குமார் போன்ற அரசியல்வாதிகள் இப்படி தனிமனித தாக்குதலை தொடுக்கிறார்கள். கருத்தை கருத்தால் எதிர்கொள்ளாமல் கிண்டலாக பேசுவதையே புத்திசாலித்தனம் என ஜெயக்குமார் நினைத்துக்கொண்டிருக்கிறார் என சமூக வலைத்தளங்களில் பலரும் கூறி வருகின்றனர்.