கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவின் ஊகான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியது. இது உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி அமெரிக்கா , இந்தியா, இங்கிலாந்து என வல்லரசு நாடுகளை நிலை குலைய வைத்தது.
இந்த நிலையில் ஊரடங்கு கடுமையாக ஏற்படுத்தப்பட்டு எல்லா இடங்களிலும் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டாலும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் உருமாறிய கொரோனா இரண்டாவது அலை என மக்களை பீதியடைய வைத்துள்ளது.
இந்நிலையில் ஜப்பான் நாட்டிலும் கொரோனா வைரஸ் தாக்கம் உள்ளதால் வரும் பிப்ரவரி மாதம் 7ம் தேதி வரை தேசிய அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது