தற்போது அதி நவீன விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக எல்லோர் கையிலும் ஆண்ட்ராய்ட் ஃபோன் உள்ளது. எந்த நேரமும் செல்போன் உடனே வாழும் அளவு மக்கள் பழகி விட்டனர்.
இந்த சூழ்நிலையில் அந்தக்கால லேண்ட் லைன் தொலைபேசிகளை மறந்து விட்டனர். இருப்பினும் முக்கிய அலுவலகங்கள் பலவற்றில் லேண்ட் லைன் இணைப்பு இல்லாமல் இல்லை அதில் தொடர்பு கொள்வதுதான் சிறந்த வழியாக பெரிய நிறுவனங்களுக்கு உள்ளது.
வரும் ஜனவரி முதல் லேண்ட்லைனில் இருந்து செல்ஃபோனுக்கு தொடர்பு கொள்ளும்போது முதலில் 0 சேர்க்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.