ஆரம்ப காலங்களில் சேட்டிலைட் சேனலான சன் தொலைக்காட்சியில் சூப்பர் குடும்பம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் ஜேம்ஸ் வசந்தன். இவர் ஒரு இசை ஆசிரியர் என்பதால் தனது மாணவன் சசிக்குமார் தயாரித்து இயக்கி நடித்த சுப்ரமணியபுரம் படத்தில் முதல் முதல் இசையமைத்தார். அப்படம் பெரும் வெற்றி பெற்றது பாடல்களும் வெற்றி பெற்றது பின்பு பசங்க படத்துக்கும் இசையமைத்தார். சில வருடங்களாக படங்களுக்கு அதிகம் இசையமைக்காத இவர் தற்போது சங்க இலக்கியத்தை மெருகேற்றும் வகையில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற இசை ஆல்பத்தை வெளியிட்டுள்ளார்.
பழைய சங்க கால பாடல்களை லேட்டஸ்ட் வடிவில் வெளியிட புது முயற்சியாக இது தெரிகிறது.
சங்க இலக்கியத்தை நவீன இசை வழியே இத்தலைமுறைக்கு அறிமுகப்படுத்த @Vasanthan_James தொடங்கியுள்ள சேர்ந்திசைக்குழு 'தமிழ் ஓசை'. https://t.co/4BSMVgHzaz
கணியன் பூங்குன்றனாரின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’.@CMOTamilNadu @mkstalin @Udhaystalin @Anbil_Mahesh @TThenarasu @onlynikil #YOYK pic.twitter.com/DSMEQ70XAG— Nikil Murukan (@onlynikil) May 20, 2021