cinema news
இளையராஜாவுக்கு அட்வைஸ் பண்ற அளவு பெரிய ஆளா- ஜேம்ஸ் வசந்தனை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்
இசைஞானி இளையராஜா சமீபத்தில் அம்பேத்கரை மோடியோடு ஒப்பிட்டு பேசினார் . இந்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இளையராஜா எப்படி இது போல சொல்லலாம். எப்படி அம்பேத்கரை மோடியோடு ஒப்பிடலாம் என கருத்துகள் வலுத்து வருகிறது. இந்த நிலையில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனும் இளையராஜாவின் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக இளையராஜாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மேலும் ரஹ்மான் போல ஆக்கபூர்வமாக ஏதாவது செய்ய வேண்டும் எனவும் இளையராஜாவுக்கு அட்வைஸ் செய்வது போல கருத்து கூறியுள்ளார்.
இதை பார்த்த இளையராஜா ரசிகர்கள் ஜேம்ஸ் வசந்தனை சமூக வலைதளங்களில் கழுவி ஊற்றி வருகின்றனர். குறிப்பாக நீங்க போட்ட ஒரே ஒரு பாட்டு ஹிட்டு. அதுவும் இளையராஜா போட்ட சின்னக்கண்ணன் அழைக்கிறான், தலையை குனியும் தாமரையே பாட்டோட உல்டாதான். நீங்க எல்லாம் அவருக்கு அட்வைஸ் செய்யலாமா என ஜேம்ஸ் வசந்தனை விமர்சித்து வருகின்றனர்.