Latest News
கொரோனா பிரச்சினையால் மதுரையில் ஜல்லிக்கட்டு நடக்குமா?அமைச்சரின் பதில்
உலகம் முழுவதும் தற்போது ஓமிக்ரான் தொற்று அச்சுறுத்தி வருகிறது. இதனால் உலக நாடுகள் முழுவதும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலும் இரவு நேர லாக் டவுன்கள் சில மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொங்கல் பண்டிகை வேறு நெருங்கி வருகிறது. இதனால் மக்கள் கூட்டம் அலைமோத இருக்கும் நிலையில் கூட்டத்துடன் நடக்கும் விழாக்களுக்கு விரைவில் தடை போடும் நிலை உள்ளது.
பொங்கல் பண்டிகையை ஒட்டி மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் , மற்றும் பாலமேடு மற்றும் சுற்றுப்புறபகுதிகளில் ஜல்லிக்கட்டு விழா வருடா வருடம் நடைபெறும் இதில் பாலமேடு ஜல்லிக்கட்டும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டும் உலகபுகழ்பெற்றது ஆகும்.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜல்லிக்கட்டு நடக்குமா என கடும் குழப்பம் எழுந்த நிலையில் அமைச்சர் மூர்த்தி இது குறித்து கூறி இருப்பதாவது,
கொரோனா பரவல் இருந்தாலும் கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடக்கும் . கொரோனா பரவினால் சூழ்நிலைக்கு தகுந்தவாறு ஜல்லிக்கட்டு நடக்கும் எனவும் அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார்.
அலங்காநல்லூர் ஜல்லிகட்டுதான் முக்கியமான திருவிழாவாக பொங்கலை ஒட்டி மதுரையில் கொண்டாடப்படும். தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் இந்த மாடுபிடி திருவிழா தொடர்ந்து தடைபடுகிறதே என மக்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.
