ஜக்கி வாசுதேவின் பேச்சுக்கு எஸ்.வி சேகர் ஆதரவு

ஜக்கி வாசுதேவின் பேச்சுக்கு எஸ்.வி சேகர் ஆதரவு

கோவை மாவட்டம் வெள்ளியங்கிரியில் சத்குரு ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையம் உள்ளது. இம்மையத்தின் நிர்வாகியான சத்குரு ஜக்கி வாசுதேவ் கோவில்களை அரசிடமிருந்து பொதுமக்களிடம் விட்டுவிடுங்கள் என கடந்த மாதம் கோரிக்கை வைத்திருந்தார்.

11,999 கோவில்கள் ஒரு கால பூஜைகூட நிகழாமல் அழிந்து வருகின்றன. 34,000 கோவில்கள் 10,000க்கும் குறைவான வருட வருவாயுடன் போராடுகின்றன. 37,000 கோவில்களில் பூஜை, பராமரிப்பு, பாதுகாப்பிற்கு ஒருவர் மட்டுமே உள்ளார். கோவில்களை பக்தர்களிடம் விடுங்கள். தமிழக கோவில்களை விடுவிக்கும் நேரமிது.  இதுவே அவர் விடுத்த கோரிக்கை.

இதற்கு நடிகரும் பாஜக உறுப்பினருமான எஸ்.வி சேகர் தனது முழு ஆதரவை வழங்கியுள்ளார்.